மாவட்ட அளவிலான மேஜைப் பந்துப்போட்டி
விருதுநகர், : விருதுநகர் வே.வ.வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லுாரியில் தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு கல்லுாரி விளையாட்டுத்துறை சார்பில் மாவட்ட அளவிலான மேஜைப் பந்துப் போட்டி கல்லுாரிச் செயலர் மதன் தலைமையில் நடந்தது. இப்போட்டியில் மாணவர்கள் 87 பேர் பங்கேற்றனர். ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான முதல் பிரிவில் மாணவி சீமா முதல் இடம், தண்யா இரண்டாம் இடம் வென்றனர். ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான இரண்டாம் பிரிவில் மாணவி தண்சிகாஸ்ரீ முதல் இடம், ஆசிலா இரண்டாம் இடத்தை வென்றனர்.ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மூன்றாம் பிரிவில் ராமவர்சினி முதல் இடம், தண்யா இரண்டாம் இடம் வென்றனர். இறுதி பொதுப்பிரிவில் மாணவி பிரதீபா முதல் இடம், ராமவர்சினி இரண்டாம் இடம் வென்றனர்.