மாவட்ட அளவிலான யோகா போட்டி
விருதுநகர்: விருதுநகரில் அம்பாள் ராமசாமி யோகா மையம் சார்பில் மாவட்ட அளவிலான 25 ம் ஆண்டு யோகாசன போட்டிகள் நடந்தது. இதில் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் 600 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதில் விருதுநகர் காமராஜ் பொறியியல் கல்லுாரி மாணவிகள் அதிக பரிசுகளை பெற்று அழற்கோப்பையை வென்றனர். போட்டியில் வென்ற மாணவிகளை கல்லுாரி தாளாளர் தர்மராஜன் பாராட்டினார்.