மேலும் செய்திகள்
நான்கு வழிச்சாலையில் கவிழ்ந்த லாரி
28-Aug-2024
ஸ்ரீவில்லிபுத்துார் : தினமலர் செய்தி எதிரொலியாக திருமங்கலம்- - ராஜபாளையம் நான்கு வழிச்சாலையில் டைவர்சன் போர்டுகள் வைக்கப்பட்டதால், வாகன ஓட்டிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் இருந்து விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் வரை 71.6 கி.மீ., துாரத்திற்கு நான்கு வழிச்சாலைகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது.இதில் மேம்பாலங்கள் அமைக்கும் இடங்களில் ரோடுகள் டைவர்சன் செய்யப்பட்டுள்ளது. ஆனால் டைவர்சன் போர்டுகள் வைக்க படாததால் விபத்துகள் ஏற்பட்டு வருகிறது.கடந்த 2 வாரத்திற்கு முன்பு நத்தம்பட்டி அருகே அர்ஜுனா நதி பாலத்திற்கு தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து தேனி மாவட்டம் போடி பத்திரகாளிபுரத்தைச் சேர்ந்த நண்பர்கள் இருவர் பலியாகினர்.கடந்த சில நாட்களுக்கு முன்பு விருதுநகரில் இருந்து மளிகை பொருட்களை ஏற்றி கொண்டு கேரளா சென்ற லாரி லோடுடன் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.எனவே திருமங்கலம் - ராஜபாளையம் நான்கு வழிச்சாலையில் விபத்துகளை தடுக்க டைவர்சன் போர்டுகள் வைக்க வேண்டுமென தினமலர் செய்தி வலியுறுத்தியது. இதன் எதிரொலியாக தற்போது நான்கு வழிச்சாலையில் விபத்து அபாயம் ஏற்படும் இடங்களில் 100 மீட்டர், 50 மீட்டர் தொலைவில் டைவர்சன் போர்டுகள் வைக்கப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.
28-Aug-2024