உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பா.ஜ., கொள்கையில் இருந்து தி.மு.க., மாறுபட்டது: பாலகிருஷ்ணன்

பா.ஜ., கொள்கையில் இருந்து தி.மு.க., மாறுபட்டது: பாலகிருஷ்ணன்

விருதுநகர்:''பா.ஜ., கொள்கையில் இருந்து தி.மு.க., எப்போதும் மாறுபட்டது''என மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.விருதுநகரில் நடந்த கட்சியின் நகர, ஒன்றிய செயலாளர்களுக்கான தென்மண்டல கூட்டத்தில் பங்கேற்ற பாலகிருஷ்ணன் கூறியதாவது:ஜாதி மறுப்பு திருமணம் செய்த தம்பதிகள், பெற்றோரை தாக்குபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஆணவக்கொலைகள் தடுப்புச் சட்டத்தை முதல்வர் ஸ்டாலின் கொண்டு வர வேண்டும்.தமிழக அரசு துறைகளில் ஊழியர்கள், ஆசிரியர்கள், செவிலியர்கள், மருத்துவர்கள், பேராசிரியர்கள் தொகுப்பூதியத்தில் பணியமர்த்தப்படுகிறார்கள். தி.மு.க., அரசு அவுட்சோர்சிங் முறையை பின்பற்றுவது ஏற்புடையதல்ல. தமிழகத்தில் மூடப்பட்டுள்ள கூட்டுறவு சர்க்கரை, நுாற்பாலை, சிமென்ட் ஆலைகளை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.முன்னாள் முதல்வர் கருணாநிதி நாணயம் வெளியீட்டு விழாவை வைத்து அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமி சர்ச்சையை கிளப்புகிறார். பா.ஜ., கொள்கையில் இருந்து தி.மு.க., எப்போதும் மாறுபட்டது.மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி முல்லைப் பெரியாறு அணையின் உறுதித்தன்மை அறிய எந்த கமிஷனும் அமைக்கவில்லை. வயநாடு நிலச்சரிவால் மக்களிடம் ஏற்பட்டுள்ள அச்சத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்துகின்றார். புதிய அணை வேண்டும். ஆனால் முல்லைப் பெரியாறு அணை பலமாகவே உள்ளது என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை