தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு தான் தீவிரமாக செயல்பட வேண்டும் தி.மு.க., அமைச்சர் பேச்சு
விருதுநகர்: தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு தான் உள்ளது. தீவிரமாக செயல்பட வேண்டும் என தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் சாத்துார் ராமச்சந்திரன் பேசினார்.சாத்துார் ராமச்சந்திரன் பேசியதாவது: நாம் முன்னேற தளபதி இருக்க வேண்டும் 50 ஆண்டுகாலம் இந்த ஆட்சி நடக்க வேண்டும். நீங்கள் வாழும் பகுதியிலே இந்த இயக்கத்திற்கு ஓட்டு சேர்க்கும் பணியை செய்ய வேண்டும். விரைவில் தேர்தல் வரவுள்ளது. ஓராண்டு என்பது போகிற போக்கில்வேகமாக போய்விடும். ஒவ்வொரு நாளும் கரைந்து கொண்டே வருகிறது. தேர்தல் மிக வேகமாக நெருங்கும். உதயசூரின், கூட்டணி கட்சிகளுக்கு ஓட்டு சேகரிக்க வேண்டும். இந்த சமூகம் முன்னேற தி.மு.க., வேண்டும். ஏமாற்றுவதற்கு பலர் வருவர். ஓட்டு வங்கியை நம் பக்கம் தக்க வைக்கும் கடமை நம் ஒவ்வொருவருக்கும் உண்டு, என்றார்.தங்கம் தென்னரசு பேசியதாவது: நம் அரசு கொள்கைகளின் விடிவெள்ளியாக திகழ்கிறது. நாடி நரம்புகளில் நாம்ஏற்றுக் கொண்டுள்ள தத்துவம் சமூக நீதி. ஒடுக்கப்பட்ட சமூகத்திற்கு ஆதரவான இயக்கம் இது.ஒடுக்கப்பட்ட மக்களை கைதுாக்கிவிட தான் எங்கள் இயக்கம். இந்த இயக்கம் மட்டுமே உங்களுடன் இணைந்து பணியாற்றும் இயக்கம். ஆதிதிராவிடர் நல குழு அமைப்பாளர்கள் எடுக்கும் முடிவுகளுக்கு நாங்கள் உறுதி அளித்து துணை நிற்போம். எல்லாவற்றிற்கும் மேலாக முன்னுரிமை அளிக்க வேண்டிய காலத்தின் கட்டாயம் உள்ளது, என்றார்.