உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மேம்பாலம் இல்லாததால் தொடரும் விபத்துக்கள் சிரமத்தில் காரியாபட்டி பேரூராட்சி மக்கள்

மேம்பாலம் இல்லாததால் தொடரும் விபத்துக்கள் சிரமத்தில் காரியாபட்டி பேரூராட்சி மக்கள்

காரியாபட்டி : காரியாபட்டி கள்ளிக்குடி பிரிவு ரோட்டில் மேம்பாலம் இல்லாததால் ரோட்டை கடக்க முற்படும்போது அடிக்கடி விபத்து நடப்பது, சமீபத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட பின் ஏராளமான இடங்கள் இருப்பது கண்டறியப்பட்டு, பின் விரிவுபடுத்த நடவடிக்கை இல்லாததால் மீண்டும் ஆக்கிரமிக்க துவங்கியதால் போக்குவரத்துக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டு வருவது உள்ளிட்ட காரணங்களால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.காரியாபட்டியில் சமீபத்தில் செவன்பட்டியிலிருந்து பஜார் வரையிலும், நான்கு வழிச்சாலையில் இருந்து திருச்சுழி ரோடு வரை ரோட்டோரங்களில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. அப்பகுதியில் இருந்த மரக்கிளைகளும் வெட்டப்பட்டன. நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான இடங்கள் ஏராளமாக இருப்பது கண்டறியப்பட்டது. பின் விரிவுபடுத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. நடவடிக்கை இல்லை.தற்போது மீண்டும் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருகின்றன. போக்குவரத்திற்கு கடும் நெருக்கடி ஏற்பட்டு வருவதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். மதுரை - துாத்துக்குடி நான்கு வழிச்சாலை கள்ளிக்குடி பிரிவு ரோட்டில் மேம்பாலம் இல்லாததால் ரோட்டை கடக்க முற்படும் போது அடிக்கடி விபத்து ஏற்பட்டு, உயிர்ச்சேதம் ஆகிறது. முக்கு ரோட்டில் ரவுண்டானா இல்லாததால் வாகனங்கள் குறுக்கும் நெடுக்குமாக சென்று விபத்தில் சிக்குகின்றனர்.முக்கு ரோட்டில் இருந்து செவல்பட்டி வரையிலும், பஜாரில் இருந்து மந்திரி ஓடை விளக்கு வரையிலும் டிவைடர் இல்லாததால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். ஆக்கிரமிக்க கூடாது என எச்சரிக்கை பலகை வைத்திருந்தனர். அதைப்பற்றி யாரும் கவலை இல்லாமல் மீண்டும் ஆக்கிரமித்து வருவதால் போக்குவரத்துக்கு நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. ஆக்கிரமிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- பாண்டியராஜன், வழக்கறிஞர். கள்ளிக்குடி பிரிவு ரோட்டில் ரோட்டை கடக்க படாத பாடு படுகின்றனர். சில நேரங்களில் பெரும் அசம்பாவிதங்கள் ஏற்படுகின்றன. அச்சத்துடன் ரோட்டை கடக்க நேரிடுகிறது. அடிக்கடி உயிர்பலி ஏற்பட்டு வருகிறது. மேம்பாலம் கட்டினால் அடிக்கடி நடக்கும் விபத்து தவிர்க்கப்படும்.- ரமேஷ், தனியார் ஊழியர்.

மேம்பாலம் வேண்டும்

மேம்பாலம் வேண்டும்

முக்கு ரோட்டில் இருந்து செவல்பட்டி பிரிவு ரோடு வரையிலும், பஜாரிலிருந்து மந்திரிஓடை பிரிவு ரோடு வரையிலும் எதிர் எதிரே வரும் வாகனங்களால் அடிக்கடி விபத்து, போக்குவரத்துக்கு நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. டிவைடர் ஏற்படுத்த வேண்டும். முக்கு ரோட்டில் வாகனங்கள் குறுக்கும் நெடுக்குமாக செல்வதால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. ரவுண்டானா ஏற்படுத்த வேண்டும்.- முருகேசன், தனியார் ஊழியர்.

விபத்து அபாயம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை