மேலும் செய்திகள்
விழிப்புணர்வு பிரசாரம்
22-Feb-2025
விருதுநகர்: விருதுநகரில் கே.வி.எஸ்., மேல்நிலைப்பள்ளியில் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை சார்பில் சுற்றுச்சூழல் கல்வி திட்டம் 2024--25 கீழ் கிரீன் டிரஸ்ட் மூலம் மாவட்ட அளவிலான தேசிய பசுமைப்படை மாணவர்கள் பங்கேற்ற நீடித்த நிலையான வாழ்வியல் முறை குறித்த கண்காட்சி நடந்தது. மாவட்ட உதவி சுற்றுச்சூழல் பொறியாளர் உஷாராணி துவக்கி வைத்தார். கிரீன் டிரஸ்ட் நிர்வாக இயக்குனர் குழந்தைவேல் வரவேற்றார். மாணவர்கள் காளான் வளர்ப்பு முறைகள், மாடித்தோட்டம் அமைத்தல் போன்ற பல்வேறு சுற்றுச்சூழல் பாதுகாப்பு முறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் படைப்புகளை காட்சிப்படுத்தியிருந்தனர். மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ஹேமந்த்ஷோசன் பரிசு வழங்கினார்.
22-Feb-2025