உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / கல்லுாரி ரோட்டில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க எதிர்பார்ப்பு

கல்லுாரி ரோட்டில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க எதிர்பார்ப்பு

அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டையில் கல்லுாரி சாலையில் திருட்டுச் சம்பவங்களை தடுக்க கண்காணிப்பு கேமராக்கள் அவசியம் ஆகிறது.அருப்புக்கோட்டை எஸ்.பி.கே., கல்லுாரி ரோடு வழியாக தொட்டியான்குளம், புலியூரான், இலங்கிபட்டி உட்பட பல கிராமங்களை சேர்ந்த மக்கள் வந்து செல்வர். ஆயிரக்கணக்கான பள்ளி, கல்லுாரி மாணவர்கள் இந்த ரோட்டை பயன்படுத்தி செல்வர். மதுரை -- துாத்துக்குடி நான்கு வழிச்சாலையில் செல்ல கல்லுாரி ரோட்டை பயன்படுத்தி செல்ல வேண்டும்.நகரில் மற்ற ரோடுகளில் போலீசார் குற்றச் செயல்களை தடுக்க, சந்தேகப்படும் படியான நபர்களை கண்காணிக்க சி.சி.டி.வி., கேமராக்களை பொருத்தி டவுன் ஸ்டேஷனில் உள்ள கன்ட்ரோல் அறையில் இருந்து கண்காணிக்கின்றனர். ஆனால் முக்கியமான எஸ்.பி.கே., கல்லுாரி ரோட்டில் சி.சி.டி.வி., கேமராக்கள் பொருத்தப்படவில்லை. பைக் திருடர்கள், செயின் பறிப்பவர்கள் போலீசாரின் கண்காணிப்பில் இருந்து எளிதாக இந்த ரோட்டை பயன்படுத்தி தப்பி விடுகின்றனர். புறநகர் பகுதியில் இந்தச் சாலை இருப்பதால் குற்ற சம்பவங்களுக்கு ஏதுவாகவும் இருக்கிறது. இந்தப் பகுதியில் போலீசார் ரோந்து வருவதும் இல்லை. பள்ளி, கல்லூரி நேரங்கள் தவிர, மற்ற நேரங்களில் ரோடு ஆட்கள் நடமாட்டமின்றி இருக்கும். இதனால் குற்றச்செயலில் ஈடுபடுபவர்கள் இந்த ரோட்டை பயன்படுத்தி மதுரை - தூத்துக்குடி நாற்கர ரோட்டில் சென்று எளிதில் தப்பித்து விடலாம்.கல்லுாரி ரோட்டில் போலீசார் நவீன சி.சி.டி.வி., கேமராக்களை பொருத்தி கண்காணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை