உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / வெற்றிலையூரணியில் மான்கள் சரணாலயம் அமைக்க எதிர்பார்ப்பு

வெற்றிலையூரணியில் மான்கள் சரணாலயம் அமைக்க எதிர்பார்ப்பு

சிவகாசி: வெம்பக்கோட்டை ஒன்றியம் வெற்றிலையூரணி ஆனைக்கூட்டம் பகுதியில் அதிகமான மான்கள் நடமாடுவதால் இப்பகுதியில் மான்கள் சரணாலயம் அமைக்க வேண்டும் என வனவிலங்கு ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.வெம்பக்கோட்டை ஒன்றியம் வெற்றிலையூரணி, ஆனைக்கூட்டம் உள்ளிட்ட பகுதிகளில் மக்காச்சோளம் பருத்தி உள்ளிட்ட பயிர்களை விவசாயிகள் பயிரிடுகின்றனர். இப்பகுதியில் உள்ள கண்மாய்களில் தண்ணீர் ஆதாரமும் உள்ளது. இதனால் இப்பகுதியில் அதிகமான மான்கள் உணவிற்காக வசிக்கின்றன. இவைகள் அவ்வப்போது உணவைத் தேடி வெளியில் வரும்போது ரோட்டில் வாகனங்களால் அடிபட நேரிடுகின்றது.மேலும் ஊருக்குள் வரும்போது தெருநாய்களால் கடிக்கப்பட்டு இறந்து விடுகின்றது. விவசாய பகுதிகளில் உள்ள கிணறுகளில் விழுந்தும் பாதிக்கப்படுகின்றது. கடந்த காலங்களில் இது போல் அடிக்கடி நடந்த சம்பவங்களால் மான்கள் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகின்றது. எனவே இப்பகுதியில் மான்களை பாதுகாக்க மான்கள் சரணாலயம் அமைக்க வேண்டும் என வனவிலங்கு ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை