உண்ணாவிரதம்
வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு அருகே ராமச்சந்திரபுரத்தில் டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்யக்கோரி உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இப்பகுதியில் கோயில், பள்ளிகள் இருக்கும் நிலையில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மது கடையால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். பட்டியக்கல் பஸ் ஸ்டாப்பில் குடிமகன்களின் தொல்லையால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். எனவே, இந்த டாஸ்மாக் கடையை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டுமென ராமச்சந்திரபுரம், ரங்கப்பநாயக்கன்பட்டி ஊர்மக்கள் சார்பில் உண்ணாவிரதம் நடந்தது. ஏராளமானோர் பங்கேற்றனர்.