உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / நுால் மில்லில் தீ விபத்து

நுால் மில்லில் தீ விபத்து

ராஜபாளையம், ஜூலை 3- ராஜபாளையம் அருகே சத்திரப்பட்டியை சேர்ந்த பழனி முருகன் என்பவருக்கு எஸ்.ராமலிங்காபுரத்தில் 10-ம் எண் நுால் தயாரிக்கும் ஓ.இ டெக்ஸ்டைல் மில் உள்ளது. இவரது குடோனில் பஞ்சு தயாரிப்பதற்கான பேல்களை அடுக்கி வைத்திருந்தார். நேற்று முன்தினம் நள்ளிரவு நடந்த தீ விபத்தில் பஞ்சு பேல்களில் தீப்பற்றியது. ராஜபாளையம் தீயணைப்பு வீரர்கள் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இருப்பினும் வேகமாக பரவிய தீயில் பேல்கள் முற்றிலும் எரிந்து சேதமாகின. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதல் கட்ட விசாரணையில் போலீசார் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை