உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / நிறுவியர் நாள் விழா

நிறுவியர் நாள் விழா

விருதுநகர்: விருதுநகர் ச.வெள்ளைச்சாமி நாடார் பாலிடெக்னிக் கல்லுாரியில் 67வது நிறுவியர் நாள், விடுதி நாள் விழாவை ஷத்திரிய வித்யாசாலா மானேஜிங் போர்டு முன்னாள் தலைவர் குணசேகரன் தலைமையில் நடந்தது. இதில் கல்லுாரி மானேஜிங் போர்டு அட்ஹாக் ஆல்டர்மென் ராஜாமணி முன்னிலை வகித்தார்.ஓராண்டு கல்லுாரி நிகழ்ச்சிகளின் தொகுப்பை கல்லுாரி முதல்வர் பிரேம் ஆனந்த், விடுதி நிகழ்ச்சி தொகுப்பை கல்லுாரி மானேஜிங் போர்டு விடுதி துணை காப்பாளர் ஸ்ரீதரன் சமர்பித்தனர்.இதில் முன்னாள் செயலாளர் நாராயணமூர்த்தி, அறக்கட்டளை பொருளாளர் விவேகானந்தன், கல்லுாரி புரவலர் குறளரசன், கல்லுாரி மானேஜிங் போர்டு தலைவர் மோகன், உப தலைவர் ராஜன், செயலாளர் கண்ணன், பொருளாளர் ஜெகதீசன் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ