மேலும் செய்திகள்
இலவச கண் பரிசோதனை முகாம்
03-Mar-2025
காரியாபட்டி, மார்ச் 8--காரியாபட்டி கல்குறிச்சியில் நியூ லைப் பவுண்டேஷன், அமலா பாலி கிளினிக், மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம், விவேகானந்தா கேந்திரா, மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து இலவச கண் சிகிச்சை முகாம் நடத்தினர். மல்லாங்கிணர் வட்டார மருத்துவ அலுவலர் வேல் விக்னேஷ் தலைமை வகித்தார். எஸ்.ஐ., மகேஸ்வரன் முன்னிலை வகித்தார். நிறுவனர் டேவிட் பாலு வரவேற்றார். டாக்டர்கள் சுதர்சன், நவிதா, தீபக் ராஜா, சரவண பாண்டி சிகிச்சையளித்தனர். கேந்திரா ஒருங்கிணைப்பாளர் பேச்சியப்பன், கண் மருத்துவமனை ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர். நிறுவனர் முனீஸ்வரன் நன்றி கூறினார்.
03-Mar-2025