உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பள்ளி மாணவர்களுக்கான இலவச சீருடை நெசவு பணி தீவிரம்

பள்ளி மாணவர்களுக்கான இலவச சீருடை நெசவு பணி தீவிரம்

விருதுநகர்:பள்ளி மாணவர்களுக்கு இலவச சீருடை வழங்குவதற்காக விருதுநகர் மாவட்ட நெசவாளர்கள் கூட்டுறவு சங்கங்களில் இருந்து 43. 18 லட்சம் மீட்டர் சீருடை துணிகள் உற்பத்தி பணிகள் தீவிரமாக நடக்கிறது.தென் மாவட்டங்களில் உள்ள அரசு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு 2025- - 2026 கல்வியாண்டில் வழங்குவதற்கான இலவச சீருடை உற்பத்திக்கு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 28 நெசவாளர்கள் கூட்டுறவு சங்கங்களுக்கு ஆர்டர் வழங்கப்பட்டுள்ளது. 43 லட்சத்து 18 ஆயிரத்து 20 மீட்டர் துணி நெசவு பணிகளில் சுந்தரபாண்டியம், ஸ்ரீவில்லிப்புத்துார், சேத்துார், ராஜபாளையம், புனல்வேலி பகுதிகளைச் சேர்ந்த 6 ஆயிரம் நெசவாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை 24.42 லட்சம் மீட்டர் சீருடை துணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ளவற்றை தயாரிக்கும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி