விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் ஹிந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடந்தது.அருப்புக்கோட்டையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் ஹிந்து முன்னணி சார்பில், பாலையம்பட்டி நெசவாளர் காலனி, அன்பு நகர், மணி நகரம், சிவன் கோயில் உட்பட 12 இடங்களில் பிள்ளையார் சிலைகள் வைக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது. நேற்று மாலை 5:00 மணிக்கு டி.எஸ்.பி., அலுவலகம் எதிரில் இருந்து ஊர்வலம் புறப்பட்டது. ஊர்வலத்தை சித்தர் ரமேஷ் சுந்தரம் துவக்கி வைத்தார். ஹிந்து முன்னணி மாவட்ட செயற்குழு உறுப்பினர் குமார் வரவேற்றார். மதுரை ரோடு, முஸ்லிம் பஜார் சிவன் கோயில் ரோடு, மெயின் பஜார், பந்தல்குடி ரோடு வழியாக பெரிய கண்மாயில் கரைக்கப்பட்டது. நிர்வாகிகள் பொன் முனியசாமி, ஜெயக்குமார், செல்வம், ராமநாதன், உட்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 700 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்தனர்.* சிவகாசியில் சிவன் கோயில், பத்ரகாளியம்மன் கோயில், ராதாகிருஷ்ணன் காலனி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டிருந்த 29 பெரிய விநாயகர் சிலைகள், மக்களின் சார்பில் மாரியம்மன் கோயிலுக்கு கொண்டு வரப்பட்டது. அங்கிருந்து என்.ஆர்.கே.ஆர்., ரோடு ரதவீதிகள், வழியாக ஜக்கம்மாள் கோயில் சென்று அங்குள்ள தொட்டியில் கரைக்கப்பட்டது. ஊர்வலத்திற்கு முன்பாக விநாயகர், சிவன், பார்வதி, முருகன் என சுவாமிகள் வேடமிட்டு பக்தர்கள் வந்தனர்.