உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மெப்கோ ஸ்லெங்க் பொறியியல் கல்லுாரியில் பட்டமளிப்பு விழா

மெப்கோ ஸ்லெங்க் பொறியியல் கல்லுாரியில் பட்டமளிப்பு விழா

சிவகாசி : சிவகாசி மெப்கோ ஸ்லெங்க் பொறியியல் கல்லுாரியில் 2024 ல் முடித்த மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடந்தது. கல்லுாரி தாளாளர் டென்சிங், நிர்வாக குழு இணைச் செயலாளர் குணசிங் பிருதிவிராஜ் தலைமை வகித்தனர். கல்லுாரி முதல்வர் அறிவழகன் துவக்கி வைத்தார். அமெரிக்காவைச் சேர்ந்த எம்பெட்யூஆர் கம்பெனி தலைமை செயல் அதிகாரி ராஜேஷ் சுப்ரமணியன் 1105 பேருக்கு பட்டம் வழங்கினார். பின்னர் அவர் பேசுகையில், ஒருவர் கடந்து வந்த பாதையில் மிக முக்கியமான தீர்க்கவே முடியாத சவால்கள் வரும் பொழுது அதனை திறம்பட எப்படி போராடி வென்றார் என்பதே ஒருவருக்கு அடையாளத்தையும் தனித்துவத்தையும் கொடுக்கும். மறு கண்டுபிடிப்பு என்பது இப்போதைய தாரக மந்திரம். முன்பு இல்லாத அளவிற்கு தற்பொழுது எங்கும், எல்லா துறைகளிலும் எல்லா கண்டுபிடிப்புகளிலும் மாற்றங்கள் அதி வேகமாக நடக்கின்றன.மாணவர்கள் சுய ஒழுக்கம், தன்னம்பிக்கை, வாழ்க்கை குறிக்கோள் மற்றும் அறிவு சார்ந்த தொழில்நுட்ப பயன்பாடுகளின் மூலம் எத்தகைய சவால்களையும் திறம்பட எதிர்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !