உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / உயருது பாசிப்பயறு விலை; குறையுது துவரம் பருப்பு

உயருது பாசிப்பயறு விலை; குறையுது துவரம் பருப்பு

விருதுநகர்: விருதுநகர் மார்க்கெட்டில் பாசிப்பயறு லயன் மீடியம் 100 கிலோவிற்கு ரூ. 3000 உயர்ந்து ரூ. 6800 முதல் ரூ. 10,000, துவரம் பருப்பு புதுசு லயன் 100 கிலோவிற்கு ரூ. 600 குறைந்து ரூ. 10,300 முதல்ரூ. 10,900 என விற்கப்படுகிறது.இங்கு க.எண்ணெய் 15 கிலோ ரூ. 2550, ந.எண்ணெய் ரூ. 5775, பாமாயில் 15 கிலோவிற்கு ரூ. 10 உயர்ந்து ரூ. 2185, சர்க்கரை 50 கிலோவிற்கு ரூ. 40 உயர்ந்து ரூ. 2180, மைதா 90 கிலோ ரூ. 4590, ரவை 30 கிலோ ரூ. 1520, கொண்டைக்கடலை 100 கிலோவிற்கு ரூ. 150 குறைந்து ரூ. 6150, பொரிகடலை 50 கிலோவிற்கு ரூ. 300 குறைந்து ரூ. 4200 என விற்கப்படுகிறது.பாசிப்பருப்பு 100 கிலோவிற்கு ரூ. 150 உயர்ந்து ரூ. 9550 முதல் ரூ. 9900, உளுந்து லயன் ரூ. 200 குறைந்து ரூ. 8200 முதல் ரூ. 8400, தொலிபருப்பு ரூ. 50 குறைந்து ரூ. 9350, உருட்டு உளுந்தம் பருப்பு நாடு ரூ. 11,300, உளுந்து நாடு ரூ. 7200 முதல் 7700, பட்டாணி பருப்பு ரூ. 200 உயர்ந்து ரூ. 5000 என விற்பனை செய்யப்படுகிறது.மல்லி லயன் 40 கிலோ ரூ. 3500 முதல் ரூ. 3600, மல்லி நாடு ரூ. 3600 முதல் ரூ. 4200, முண்டு வத்தல் 100 கிலோ ரூ. 18,000 முதல் ரூ. 20,000 என விற்பனை செய்யப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ