பதவியேற்பு
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் லயன்ஸ் இன்டர்நேஷனல் பள்ளியில் மாணவர் தலைவர்கள் பதவி ஏற்பு விழா நடந்தது. தாளாளர் வெங்கடாசலபதி தலைமை வகித்தார். இயக்குனர் கோபாலகிருஷ்ணன், முதல்வர் சிவகுமார், துணை முதல்வர் பாண்டீஸ்வரி, பள்ளி நிர்வாக குழு உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர். மாணவர்களின் தலைவராக அருண்குமார், மாணவிகளின் தலைவியாக ஹர்ஷிதா ஸ்ரீ, நான்கு அணிகளின் தலைவர்கள், துணைத் தலைவர்கள் பதவி ஏற்று உறுதிமொழி எடுத்தனர். அவர்களுக்கு பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர்.