மேலும் செய்திகள்
சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி மூன்றாம் சனி உற்ஸவம்
5 hour(s) ago
கிணற்றில் விழுந்த மூதாட்டி மீட்பு
5 hour(s) ago
மதுரை:'மதுரை கோட்டத்தில் 12வது ரயில் மின்தட பராமரிப்பு பணிமனை ராஜபாளையத்தில் துவக்கப்பட்டுள்ளது' என மதுரை கோட்டம் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. விருதுநகர் -- தென்காசி பிரிவில் மின்சார இன்ஜின்கள் மூலம் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த தடத்தில் மின்சார பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளவும், திடீர் பழுதுகளை நீக்கவும் ராஜபாளையத்தில் ரூ 1.5 கோடி செலவில் பணிமனை உருவாக்கி, கடந்த மே 24 ல் துவக்கி வைக்கப்பட்டது. இந்தப் பாதையில் ஏற்படும் பிரச்னைகளை உடனுக்குடன் சரிசெய்யும் வகையில் பராமரிப்பு ரயில் பெட்டி ஒன்று நவீன உபகரணங்களுடன் எந்நேரமும் தயார் நிலையில் இருக்கும். மழைக் கால எச்சரிக்கை
மழைக்காலங்களில் தண்டவாளங்களில் மரங்கள் முறிந்து விழுவது இயல்பு. அவை 25 ஆயிரம் வாட்ஸ் மின்சாரம் பாயும் ரயில் மின்கம்பியில் விழுந்தால் ரயில் போக்குவரத்து பாதிக்கும். இம் மாதிரி சூழலில் சம்பவம் நடந்த இடத்திற்கு உடனே இந்த பராமரிப்பு ரயில் பெட்டியை அனுப்பி பாதிப்பை சரிசெய்ய முடியும். மின்கம்பியில் மரம் விழுந்தால் துண்டிக்கப்பட்ட மின் பாதையில் இருந்து 2 மீட்டர் துாரத்திற்கு மின்சார தாக்கம் இருக்கும். எனவே பொதுமக்கள் அபாயம் விளைவிக்கும் பாதிப்பு இடத்திற்கு அருகே செல்லாமல், அருகே உள்ள கேட் கீப்பர், ரயில்வே ஊழியர்களிடம் தெரிவிக்க வேண்டும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
5 hour(s) ago
5 hour(s) ago