உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / புதிய தாலுகா அலுவலக கட்டடம் திறப்பு

புதிய தாலுகா அலுவலக கட்டடம் திறப்பு

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை பந்தல்குடி ரோட்டில் ரூ.4.49 கோடியில் கட்டப்பட்ட தாலுகா அலுவலக கட்டடத்தை அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன் துவக்கி வைத்தார்.கலெக்டர் ஜெயசீலன் தலைமை வகித்தார். வருவாய், பேரிடர் மேலாண்மை துறை சார்பில் 23 பேருக்கு ரூ.22.54 லட்சத்தில் பட்டாக்களை வழங்கி பேசியதாவது: மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு அரசு அதிகமான நிதியை ஒதுக்குகிறது. அலுவலர்கள் சிரமமின்றி பணிபுரிய வசதியாகவும், மக்கள் வசதியாக வந்து செல்லவும் பல்வேறு துறைகளுக்கு நவீன வசதிகள் கொண்ட அரசு கட்டடங்கள் கட்டப்பட்டு வருகிறது. புதிய தாலுகா அலுவலக கட்டடத்தில் தாசில்தார்கள் அறைகள், அலுவலக அறை, விசாரணை அறை, கூட்ட அரங்கம், பதிவுகள் வைப்பறை, மக்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான கழிப்பறை, சாய்வுத்தளம் உள்ளிட்ட வசதிகள் உள்ளன, என்றார். ஆர்.டி.ஓ., வள்ளிக்கண்ணு, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் செந்துார் ராஜா, தாசில்தார் செந்தில்வேல் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ