உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / வருமான வரி விழிப்புணர்வு கூட்டம்

வருமான வரி விழிப்புணர்வு கூட்டம்

அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டையில் வருமான வரி குறித்தான விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.மதுரை வருமான வரித்துறை சார்பில் நடந்த கூட்டத்தில் முன்கூட்டியே வரி செலுத்துவதன் முக்கியத்துவம் வரி செலுத்தவில்லை என்றால் ஏற்படும் பிரச்னைகள் குறித்து விளக்கப்பட்டது. மதுரை கூடுதல் ஆணையர் சுபஸ்ரீ ஆலோசனைகள் வழங்கினார். வருமான வரித்துறை அதிகாரிகள் உதயசங்கர், உலகநாதன், மணிகண்டன் கலந்துகொண்டு வரி செலுத்துவதன் முக்கியத்துவம், ஆண்டுதோறும் தகவல் அறிக்கை எவ்வாறு செலுத்த வேண்டும் / யார் யார் செலுத்த வேண்டும் குறித்து விளக்கினர்.வர்த்தக சங்க உதவி தலைவர் சங்கரசேகரன், ஆடிட்டர்கள், ஆலோசகர்கள் மனிதர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை