உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / விருதுநகரில் புத்தாக்க பயிற்சி

விருதுநகரில் புத்தாக்க பயிற்சி

விருதுநகர்: விருதுநகர் சத்துணவு திட்டத்துறை மூலம் சத்துணவு பணியாளர்களுக்கான ஊட்டசத்து சுவை, உணவின் தரத்தை மேம்படுத்துதல் தொடர்பான புத்தாக்க பயிற்சியை கலெக்டர் ஜெயசீலன் துவங்கி வைத்தார்.கலெக்டர் பேசியதாவது: சமைக்கக்கூடிய உணவை பொறுமையாகபக்குவத்துடன், நம் வீட்டில் எவ்வாறு உணவு சமைக்கிறோமோ, அவ்வாறு சமைத்தாலே போதுமானது. சத்துணவுத்திட்டத்தின் மூலம் பள்ளி குழந்தைகளுக்கு, ருசியான தரமான உணவை கொடுத்தால் ஊட்டச்சத்து குறைபாட்டால் வரும் இரத்தசோகை குறைபாட்டிற்கு தீர்வு காண முடியும், என்றார். நேர்முக உதவியாளர்(சத்துணவு) ஜெகதீசன், அரசு அலுவலர்கள், சத்துணவு அமைப்பாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி