உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / அறிமுக பயிற்சி வகுப்பு

அறிமுக பயிற்சி வகுப்பு

ஸ்ரீவில்லிபுத்துார்: சுந்தரபாண்டியம் அன்னபூர்ணா கலை அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான 2 வார அறிமுக பயிற்சி வகுப்பு நடந்தது. கல்லூரி தலைவர் இளமாறன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் ராஜம்மாள் முன்னிலை வகித்தார். முதல்வர் சுப்பிரமணியன் வரவேற்றார். பயிற்சி வகுப்பில் வழக்கறிஞர் ஜான்சி போக்சோ சட்ட விழிப்புணர்வு, வழக்கறிஞர் தமிழ்வாணி தகவல் அறியும் உரிமைச் சட்டம், ஹைதராபாத் தொழில் முனைவு மேம்பாட்டு திட்ட அலுவலர் ஆனந்த் சேகர் மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் தொழில் துவங்குவதற்கான வழிமுறைகள், வேளாண்மை அலுவலர் முருகேசன் நவீன வேளாண்மை, யோகா பயிற்சியாளர் லட்சுமி யோகாவின் நன்மைகள் குறித்தும் பேசினர்.ஆசிரியை ஆனந்த வள்ளி நன்றி கூறினார். பின்னர் மாணவர்கள் செண்பகதோப்பில் கள ஆய்வு பயணம் மேற்கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி