மேலும் செய்திகள்
லயன்ஸ் மெட்ரிக் பள்ளியில் 34 வது விளையாட்டு விழா
01-Feb-2025
சிவகாசி: திருத்தங்கல் எஸ்.ஆர்.என்., அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சிவகாசி மாநகராட்சி, திருச்சி லயன் டேட்ஸ் இம்பெக்ஸ் பிரைவேட் லிமிடெட் சி.எஸ்.ஆர்., நிதி மூலம் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு லயன் டேட்ஸ் சிரப் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.மேயர் சங்கீதா தலைமை வகித்தார். கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி, கல்விக் குழு தலைவர் ஸ்ரீநிகா, லயன் டேட்ஸ் நிறுவனம் மேலாளர் முத்துராஜ் முன்னிலை வகித்தனர். இத்திட்டத்தின் படி 12 பள்ளிகளில் 3142 மாணவர்களுக்கு சிரப் வழங்கப்பட்டது.மாநகர் நல அலுவலர் சரோஜா, தி.மு.க., மாநகர செயலாளர் உதயசூரியன், முன்னாள் நகர் துணை தலைவர் பொன் சக்திவேல், மாநகராட்சி கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
01-Feb-2025