உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / கால்நடைகள் கணக்கெடுப்பு பணி தீவிரம்

கால்நடைகள் கணக்கெடுப்பு பணி தீவிரம்

விருதுநகர்: தேசிய கால்நடைகள் கணக்கெடுப்பு பிப். 28க்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.இந்தியாவில் கால்நடை கணக்கெடுப்பு ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை எடுக்கப்படுகிறது. 2019ல் 20வது கால்நடை கணக்கெடுப்பு நடந்தது. 2024ல் 21வது கால்நடைகள் கணக்கெடுப்பு செப்டம்பரில் துவங்க திட்டமிடப்பட்டு அக்டோபரில் துவங்கப்பட்டு 2025 பிப்ரவரியில் முடிக்க திட்டமிட்டப்பட்டது.இக்கணக்கெடுப்பு அலைபேசி ஆப்' வழியாக எடுக்கப்படுகிறது. தமிழகத்தில் 38 மாவட்ட ஒருங்கிணைப்பு அதிகாரிகள், 1500 மேற்பார்வையாளர்கள், 6700 கணக்கெடுப்பாளர்கள் பணிகளில் ஈடுபட்டு உள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் கால்நடைகள் இருக்கும், இல்லாத அனைத்து வீடுகள், நிறுவனங்கள், அரசு, தனியார் பண்ணைகள், இறைச்சி, முட்டைக்கோழி பண்ணைகள், வழிபாட்டு தலங்கள், கோசாலைகளில் கணக்கெடுப்பதற்காக 207 கால்நடை கணக்கெடுப்பாளர்கள், 46 மேற்பார்வையாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.மேலும் மலையடிவார பகுதிகளில் மேயும் கிடை மாடுகள், ஆடுகளின் எண்ணிக்கை விடுபடுவதை தவிர்பதற்காக மேய்ச்சலின் போது கணக்கெடுக்க கால்நடைத்துறை நடவடிக்கை எடுத்தது. இதையடுத்து கால்நடை வளர்ப்போரின் பெயர், முகவரி, ஆதார் எண், அலைபேசி எண், அவர்களிடம் உள்ள நில அளவு, தொழில், கல்வித்தகுதி, கால்நடைகளின் எண்ணிக்கை, இனம், வயது, பாலினம், பயன்பாடு குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட்டது. தற்போது வரை 75 சதவீதப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. இக்கணக்கெடுப்பு பிப். 28 க்குள் முடிக்க தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை