உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / அலைபேசி சார்ஜர் வெடித்து தீ விபத்து

அலைபேசி சார்ஜர் வெடித்து தீ விபத்து

ராஜபாளையம், ஜூன் 20- ராஜபாளையம் பொன்னகரம் குடியிருப்பை சேர்ந்தவர் ராஜேஷ் 34, மரைன் இன்ஜினியராக வேலை செய்து வரும் அவர் விடுமுறைக்கு சொந்த ஊருக்கு வந்திருந்தார். நேற்று படுக்கை அறையில் அலைபேசியை சார்ஜ் போட்டு விட்டு வெளியே சென்றார். சார்ஜர் வெடித்ததில் மெத்தையில் தீப்பற்றி எரிய தொடங்கியது. தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். இதில் கட்டில் மெத்தை முழுவதும் தீயில் எரிந்து சேதம் அடைத்தது. தெற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி