உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மாதக்கணக்கில் கிடப்பில் வாறுகால் பணி வாகன ஓட்டிகள் அவதி

மாதக்கணக்கில் கிடப்பில் வாறுகால் பணி வாகன ஓட்டிகள் அவதி

விருதுநகர்: விருதுநகர் - மதுரை ரோட்டில் வாறுகால் அமைக்கும் பணி மாதக்கணக்காகியும் நடக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் காலை, மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.விருதுநகர் - மதுரை ரோட்டில் செல்லும் வாறுகால்களில் கழிவு நீர் தடையின்றி செல்வதற்காக புதிய வாறுகால் அமைக்கும் பணிக்காக ரோடு தோண்டப்பட்டது. ஆனால் தற்போது வரை பணிகள் நடக்காமல் மாதக்கணக்கில் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் இப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.இந்த பணிகளால் பங்குனிப்பொங்கல் சமயத்தில் பக்தர்கள் தீச்சட்டி எடுத்து செல்ல முடியாமல் சிரமப்பட்டனர். ரோட்டில் விபத்து ஏற்படாமல் வைக்கப்பட்ட தடுப்புகளும் இடையூறாக உள்ளன. இதில் இருந்து வரும் துார்நாற்றத்தால் அருகே உள்ள கடைகளுக்கு வருவோர் முகம் சுழிக்கின்றனர். இது குறித்து நகராட்சி நிர்வாகத்திடம் பல முறை தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.எனவே வாகன ஓட்டிகளுக்கு மாதக்கணக்கில் சிரமத்தை ஏற்படுத்தும் வாறுகால் பணிகளை உடனடியாக முடித்து ரோட்டை சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி