உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / குண்டாற்றில் பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல் நிகழ்ச்சி

குண்டாற்றில் பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல் நிகழ்ச்சி

திருச்சுழி: திருச்சுழி திருமேனி நாதர் சுவாமி கோயிலில் பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல் நிகழ்ச்சி குண்டாற்றில் நேற்று முன்தினம் இரவு நடந்தது.ஆவணி மாதம் மூல நட்சத்திரத்தன்று அனைத்து சிவன் கோயில்களிலும் பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல் கொண்டாடப்படுகிறது. திருச்சுழி கோயிலிலும் பிட்டுக்கு மண் சுமந்த நிகழ்ச்சி குண்டாற்றில் நடந்தது. ஏராளமான பக்தர்கள் நிகழ்ச்சியை கண்டு களித்தனர். அனைவருக்கும் பிட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. சுவாமி, அம்மன் வெள்ளி ரிஷப வாகனங்களில் வீதி உலா வந்தனர். பின் கோயிலுக்கு வந்த சுவாமி, அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை