மேலும் செய்திகள்
கொண்டலம்மன் கோயில் கும்பாபிஷேகம்
11-Feb-2025
சிவகாசி:சிவகாசி அருகே அனுப்பன்குளம், நாரணாபுரம், அத்திப்பட்டி, சென்னை வாழ் ஹிந்து கம்மவார் வல்லட்ட கோத்திரம் நாரவார் வகையறாக்களுக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ நாரணம்மாள் திருக்கோயிலில் கும்பாபிஷேகம் நடந்தது.முதல் நாள் காலையில் மங்கல இசை, தேவதா அனுஞ்ஞை, எஜமானர் சங்கல்பம் பூர்வாங்க பூஜைகள் உக்த ஹோமங்கள் நடந்தது. மாலையில் புண்யாஹவாசனம், அங்குரார்ப்பணம், ஆச்சார்ய மரியாதை, யாகசால பிரவேசம் மூலவர் மற்றும் விமான அஷீமோசனம், முதல் கால வேள்வி பூஜை நடந்தது. நேற்று காலை இரண்டாம் கால வேள்வி நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடந்தது. பின்னர் அம்மனுக்கு அபிஷேகம் ஆராதனை நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
11-Feb-2025