உள்ளூர் செய்திகள்

தேசிய கருத்தரங்கு

ஸ்ரீவில்லிபுத்துார்; கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் வணிக நிர்வாகத்துறை சார்பில், தொழில் துறை திறன்கள் மேம்பாட்டுக்கான புது வழிகள் என்ற தலைப்பில் தேசிய கருத்தரங்கு நடந்தது.வேந்தர் ஸ்ரீதரன் தலைமை வகித்தார். துறை தலைவர் பாலமுருகன் வரவேற்றார். துணைத் தலைவர் சசிஆனந்த், கருத்தரங்கு ஆய்வு மலரை வெளியிட்டார். துணைவேந்தர் நாராயணன், பதிவாளர் வாசுதேவன் வாழ்த்தினர்.சென்னை கேரீர் ஒ.எஸ். நிறுவனர் கிறிஸ்டோபர் தாஸ், மலேசியா ஹைடில் பார்க் கம்பெனி தலைமை மனிதவள அதிகாரி சங்கர் சீனிவாசன், பேராசிரியர் ரவி, மனிதவள நிர்வாகி விஜயலட்சுமி பேசினர். பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பித்தனர். ஆராய்ச்சி மாணவர் சிவசங்கர் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை