உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ஒரு மாதமாக குடிநீர் இல்லை

ஒரு மாதமாக குடிநீர் இல்லை

சிவகாசி, : சிவகாசி மாநகராட்சி திருத்தங்கல் 18 வது வார்டு கருணாநிதி நகரில் ஒரு20 நாட்களாக குடிநீர், ஒரு மாதமாக குடிநீர் வராததால் குடியிருப்புவாசிகள் அவதிப்படுகின்றனர்.சிவகாசி மாநகராட்சி 18 வது வார்டு கருணாநிதி நகரில் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு 20 நாட்களுக்கும் மேலாக ஆகிறது. மேலும் புழக்கத்திற்கான தண்ணீர் வந்து ஒரு மாதத்திற்கு மேல் ஆகிறது. இதனால் இப்பகுதி மக்கள் குடிநீருக்கு பெரிதும் சிரமப்படுகின்றனர். இதனால் தண்ணீரை விலை கொடுத்து வாங்க வேண்டி உள்ளது.வெள்ளைச்சாமி, குடியிருப்பு வாசி, தண்ணீர் வராதது குறித்து பலமுறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. இப்பகுதியில் இந்த வார்டு மட்டும் புறக்கணிக்கப்பட்ட பகுதியாகவே உள்ளது. எனவே சீரான குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ