உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்

செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்

சிவகாசி, ஜூலை 11- சிவகாசி சுகாதார பணிகள் துணை இயக்குநர் அலுவலகம் முன் அனைத்து செவிலியர் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. கருப்பாயி தலைமை வகித்தார். சித்ராதேவி கோரிக்கைகளை விளக்கி பேசினார். தமிழ்நாடு அரசு சுகாதார துறையில் ஆரம்ப சுகாதார நிலையங்கள், கிராமங்களில் உள்ள திறன் மேம்பாட்டு செவிலியர் பணியிடம் உள்ளிட்ட எந்தவொரு நிரந்தர செவிலியர் பணியிடங்களையும் மறுநிலைப்படுத்துதல் என்ற பெயரில் பணியிடங்களை நீக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும். அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் நிரந்தர செவிலியர் பணியிடங்களை தோற்றுவித்து, ஒப்பந்த செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. செவிலியர் உமாதேவி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !