நிழற்குடை திறப்பு
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் அருகே வன்னியம்பட்டி விலக்கில், புதிய பயணியர் நிழற்குடை திறக்கப்பட்டது.இப்பகுதியில் இருந்த பயணியர் நிழற்குடை ரோடு விரிவாக்கத்தின் போது இடிக்கப்பட்டதால் மக்கள் மிகுந்த சிரமத்தில் ஆளாகி வந்தனர்.இந்நிலையில் புதிய நிழற்குடை கட்டித் தருமாறு மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியாகி இருந்தது.இந்நிலையில் எம்.எல்.ஏ., நிதியிலிருந்து ரூ.9 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பில் புதிய பயணியர் நிழற்குடை கட்டப்பட்டது இதனை நேற்று எம்.எல்.ஏ மான்ராஜ் திறந்து வைத்தார். அப்பகுதி கட்சி நிர்வாகிகள், குடியிருப்போர் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.