கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டி
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விருதுநகர் மாவட்ட தமிழ் வளர்ச்சி துறை சார்பில் கல்லூரி மாணவர்களுக்கான கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடந்தது.முதல்வர் சரவணன் தலைமை வகித்தார். பேராசிரியை கணேஸ்வரி வரவேற்றார். துறைத் தலைவர் ரவி நோக்கவுரையாற்றினார். பத்துக்கும் மேற்பட்ட கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர்.கட்டுரைப் போட்டியில் செந்தில்குமார் நாடார் கல்லூரி மாணவி சந்தியா, கவிதை போட்டியில் சாத்தூர் அரசு கலைக்கல்லூரி மாணவர் ஆதீஸ்வரன், பேச்சு போட்டியில் அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரி மாணவி ஷோபனா முதலிடம் பெற்றனர். முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு ரொக்க பரிசுகள் வழங்கப்பட்டது. பேராசிரியர் கிருஷ்ணமூர்த்தி நன்றி கூறினார்.