போலீஸ் செய்தி
பட்டாசு பறிமுதல்: ஒருவர் கைதுசாத்துார்: வெம்பக்கோட்டை வி.ஏ.ஓ செந்தில்குமார் தலைமையில் வருவாய் துறையினர் லட்சுமி பயர் ஒர்க்ஸ் அருகில் காட்டுப் பகுதியில் அரசு அனுமதி இன்றி சிவகாசியை சேர்ந்த ராஜ்குமார், 37. கணேஷ், ஆகியோர் ராக்கெட் வெடிகளை தயாரித்தனர். கணேஷ் தப்பினார். ராஜ்குமாரை பிடித்து வருவாய்த் துறையினர் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.நகை, பணம், கார் திருட்டுசாத்துார்: சாத்துார் போக்குவரத்து நகரை சேர்ந்தவர் முருகன், 44. செப். 4ல் குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்தார். நேற்று முன் தினம் இரவு வீட்டுக்கு வந்தபோது பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்ததங்கச் செயின் மோதிரம் டாலர் உள்ளிட்ட 1 முக்கால் பவுன் நகையும், ரொக்கம்ரூ 2000, மற்றும் வீட்டின் அருகில் நிறுத்தியி ருந்த கார் திருடு போயிருப்பது தெரியவந்தது. அப்பகுதி சிசிடிவி காமிரா பதிவுகளைக் கொண்டு சாத்துார் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.தற்கொலைசிவகாசி: சிவகாசி சிவகாமிபுரம் காலனி கிழக்கு தெருவை சேர்ந்தவர் ராம கருப்புராஜ் 34. மது அருந்தும் பழக்கம் உள்ள இவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.---