உள்ளூர் செய்திகள்

போலீஸ் செய்தி

பஸ் மோதி முதியவர் பலிசாத்துார்: சாத்துார் செல்வியாரம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் பிச்சை, 85. நேற்று காலை 8:00 மணிக்கு சைக்கிளில் பஸ் ஸ்டாண்டு வந்தார். அப்போது மதுரையில் இருந்து கோவில்பட்டி நோக்கி சென்றஅரசு பஸ் மோதியதில் சம்பவஇடத்தில் பலியானார். சாத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.பட்டாசு பறிமுதல்: இருவர் கைதுசாத்துார்: வெம்பக்கோட்டை எஸ்.ஐ., செண்பகவேலன், ஆலங்குளம் எஸ்.ஐ., முருகேஸ்வரி, ஆகியோர் ரோந்து சென்ற போது தாயில்பட்டி முத்துக்கிருஷ்ணன், 35. கல்லம நாயக்கன்பட்டி பார்த்தசாரதி,46. ஆகியோர் வீட்டில் வைத்து பட்டாசு தயாரித்தனர். போலீசார் பட்டாசுகளை பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்தனர்.பட்டாசு திரி பதுக்கிய இருவர் கைதுவிருதுநகர்: ஒ.சங்கரலிங்கபுரத்தைச் சேர்ந்தவர் காமாட்சி 65. இவர் அனுமதியின்றி டூவீலரில் பட்டாசு வெள்ளைத் திரிகள் 200 குரோஸ் எடுத்துச் சென்றார். மத்திய சேனையைச் சேர்ந்தவர் ரவிக்குமார் 35. இவர் வீட்டில் சிட்டு புட்டு வெடிகள் தலா 10 சிறிய பாக்கெட்டுகள் அடங்கிய 1 பெரிய அட்டை பெட்டி அனுமதியின்றி வைத்திருந்தார். இருவரையும் ஆமத்துார் போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி