வாசகர்கள் கருத்துகள் ( 1 )
Premanathan Sambandam
மார் 19, 2025 17:14
இது எப்படி நடந்தது? இவ்வளவு நாள் தணிக்கை, சரி பார்த்தால் யாரும் செய்யவில்லையா?
விருதுநகர்:விருதுநகர் மாவட்டம், சூலக்கரை மகாத்மா காந்திநகரைச் சேர்ந்தவர் அமர்நாத், 38; சிவகாசி தலைமை தபால் அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிந்தார். அங்கிருந்து அயற்பணியாக அருப்புக்கோட்டை தலைமை தபால் அலுவலகத்தில் பணிபுரிந்து வந்தார். அப்போது, அலுவலக பணம், 5 கோடி ரூபாயை தன் வங்கி கணக்கில் வரவு வைத்து கையாடல் செய்தார்.கடந்த 2024 மே 18ல் இதுகுறித்து மாவட்ட சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். அமர்நாத்தை நேற்று முன்தினம் கைது செய்தனர். அவரிடமிருந்து, 4 கோடியே 58 லட்சத்து 90,068 ரூபாயை பறிமுதல் செய்தனர்.
இது எப்படி நடந்தது? இவ்வளவு நாள் தணிக்கை, சரி பார்த்தால் யாரும் செய்யவில்லையா?