திட்ட இயக்குனர் இடமாற்றம்
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தின் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனராக பணிபுரிந்து வந்த கேசவதாசன், திருவண்ணாமலை மாவட்ட மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குனராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மதுரை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வானதி, விருதுநகர் மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.