உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / அரசு மருத்துவமனையில் நாற்காலிகளை சீரமைப்பு

அரசு மருத்துவமனையில் நாற்காலிகளை சீரமைப்பு

விருதுநகர்: விருதுநகர் அரசு மருத்துவமனையில் சேதமான இரும்பு நாற்காலிகளை வெல்டிங், சீரமைப்பு செய்து மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான பணிகள் துவங்கி நடந்து வருகிறது.விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனைக்கு அனைத்து பகுதிகளில் இருந்தும் நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்வது அதிகரித்து வருகிறது. தனியார் மருத்துவமனையில் பரிசோதனை, சிகிச்சைக்கு அதிக செலவாவதால் விருதுநகர் அரசு மருத்துவனைக்கு வெளி நோயாளியாக வந்து ஸ்கேன், எக்ஸ்ரே பரிசோதனை செய்து உள்நோயாளியாக சேர்ந்து பலரும் குணமடைந்து செல்கின்றனர்.இங்கு புறநோயாளிகள் பிரிவுகள், மருந்தகத்தில் கூட்டம் அதிகமாக இருந்தால் நோயாளிகள் காத்திருப்பதற்காக தேவையான இரும்பு நாற்காலிகள் உள்ளது. ஆனால் மக்கள் மூன்று பேர் அமரும் நாற்காலிகளில் கூடுதல் எண்ணிக்கையில் அமர்வதால் பாரம் தாங்காமல் சேதமானது. இது போன்று சேதமான நாற்காலிகளை மருத்துவமனை பார்க்கிங் பகுதியில் சேகரித்து வைத்தனர்.இவற்றில் வெல்டிங் செய்து, தேவையான சீரமைப்பு பணிகள் செய்யும் பணிகள் தற்போது துவங்கி நடந்து வருகிறது. இந்த பணிகள் முழுவதும் முடிந்து அரசு மகப்பேறு மருத்துவமனை, புற நோயாளிகள் பிரிவு, மருந்தகம் ஆகிய இடங்களில் கூடுதல் நாற்காலிகள் அமைக்கப்பட்டு வருகிறது.இதன் மூலம் மருத்துவமனையில் நோயாளிகள் நீண்ட நேரம் நின்று கொண்டு காத்திருப்பது தவிர்க்கப்படும். மேலும் சீரமைப்பு செய்த நாற்காலிகளை உடனடியாக பணியாளர்கள் தேவையான இடங்களுக்கு கொண்டுச் சென்று வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ