மேலும் செய்திகள்
சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி மூன்றாம் சனி உற்ஸவம்
5 hour(s) ago
கிணற்றில் விழுந்த மூதாட்டி மீட்பு
5 hour(s) ago
சிவகாசி : சிவகாசி இரட்டைப் பாலத்தில் இருந்து கட்டளைபட்டி செல்லும் ரோடு சேதம், செயல்படாத டிராபிக் சிக்னல்கள் மக்கள் எண்ணற்ற பிரச்னைகளில் சிக்கித் தவிக்கின்றனர்.இப்பகுதியில் ரோடு சேதம், செயல்படாத டிராபிக் சிக்னல்கள் முக்கிய பிரச்னையாக உள்ளது. சிவகாசி இரட்டை பாலம் விலக்கிலிருந்து கட்டளைப் பட்டி செல்லும் ரோடு அமைக்கப்பட்டு 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. ரோடு போட்ட சில ஆண்டுகளிலேயே பல இடங்களில் சேதம் அடைந்து விட்டது. இதில் அவ்வப்போது கிராவல் மண் அடித்தும், ஒட்டு போடும் பணியும் நடந்தது.சிறுகுளம் கண்மாய் கரையை ஒட்டி ரோடு அமைந்துள்ளதால் எப்போதும் தண்ணீர் ஓட்டத்தினால் எத்தனை முறை சீரமைத்தாலும் ரோடு அடிக்கடி சேதம் அடைந்து விடுகின்றது. இதே ரோட்டில் பல இடங்களில் குழாய் குழாய் உடைந்து தண்ணீர் வெளியேறுவதால் ரோடு சிதைந்துள்ளது. இதில் வரும் அனைத்து வாகனங்களும் தட்டுத் தடுமாறியே வர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.டூவீலரில் செல்பவர்கள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். கட்டளைப் பட்டி ரோட்டில் இளநீர் கூடுகள் உள்ளிட்ட கழிவுகள் ரோட்டின் அருகிலேயே கொட்டப்படுகின்றது. இவைகள் அவ்வப்போது ரோட்டிற்கு வந்து விடுகின்றது. சேதமடைந்துள்ள ரோட்டில் டூவீலர்கள் தட்டு தடுமாறி வரும்போது, இளநீர் கூடுகளின் மீது ஏறி விபத்தில் சிக்குகின்றனர். எதிரெதிரே வருகின்ற வாகனங்கள் எளிதில் விலகிச் செல்ல முடியவில்லை. அரசு மருத்துவமனை செல்லும் வழியில் சேதம் அடைந்த ரோட்டினை சீரமைக்க வேண்டும்.குமார், சிவகாசி: இரட்டைப்பாலம் விலக்கிலிருந்து அரசு மருத்துவமனை ரயில்வே ஸ்டேஷன் ரோடு, நகருக்குள் செல்லும் ரோடு, ஸ்ரீவில்லிபுத்துார் ரோடு, கட்டளை பட்டி செல்லும் ரோடு என நான்கு ரோடுகள் பிரிந்து செல்கின்றன. இங்கே காலை, மாலையில் அதிகமான வாகனங்களால் எப்பொழுதுமே போக்குவரத்து நிறைந்திருக்கும். இதற்காக இங்கே டிராபிக் சிக்னல் அமைக்கப்பட்டது. ஆனால் இதுநாள் வரையிலும் செயல்படவில்லை.சிவ செல்வராஜ், சிவகாசி: இதே பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையின் முன்பாக சிறுகுளம் கண்மாய் செல்லும் ஓடை முழுவதுமே கோரைப் புற்கள் ஆக்கிரமித்துள்ளது. இதனால் மழைக்காலங்களில் தண்ணீர் வெளியேற வழி இல்லை. எனவே ஓடையை துார்வார வேண்டும். மருத்துவமனை செல்லும் ரோட்டில் ஓடை அருகே தடுப்புச் சுவர் அமைக்க வேண்டும்.
5 hour(s) ago
5 hour(s) ago