பாதுகாப்பு நிகழ்ச்சி
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை தேவாங்கர் கலை கல்லுாரியில் உள்ளக புகார் குழுவின் சார்பில் மாணவிகளுக்கான பாலியல் வன்முறை தடுப்பு மற்றும் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. முதல்வர் உமாராணி தலைமை வகித்தார். குழு ஒருங்கிணைப்பாளர் ஹேமலதா, பேராசிரியர் ஜெயந்தி முன்னிலை வகித்தனர். சமூக நலத்துறை பாலின ஆலோசகர் ராம்குமார், பாலியல் வன்முறை தடுப்புச் சட்டங்கள் அவற்றை பயன்படுத்தும் முறை தக்க வழக்கு நிகழ்வுகளின் மூலம் விளக்கினார். மூத்த ஆலோசகர் ரேணுமதி தமிழக அரசின் பெண்களுக்கான அவசர அழைப்பு 181 பற்றி கூறினார். மாணவிகளின் கேள்விகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. ஏற்பாடுகளை உள்ளக புகார் குழு உறுப்பினர்கள் செய்தனர்.