உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மார்ச் 31 வரை செல்வமகள் சேமிப்பு திட்ட சிறப்பு முகாம்கள்

மார்ச் 31 வரை செல்வமகள் சேமிப்பு திட்ட சிறப்பு முகாம்கள்

விருதுநகர்: முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் சுரேஷ் செய்திக்குறிப்பு: பெண் குழந்தைகளின் நலனுக்காக மத்திய அரசு 2015ம் ஆண்டு அறிமுகம் செய்தது செல்வமகள் சேமிப்பு திட்டம். இத்திட்டம் துவங்கியதில் இருந்து 2025 ஜன. வரை விருதுநகர் அஞ்சல் கோட்டத்தில் செல்வமகள் சேமிப்பு கணக்குகளின் எண்ணிக்கை 76 ஆயிரம் தாண்டியுள்ளது.இத்திட்டத்தின் கீழ் 10 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளுக்காக பெற்றோர் அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலர் மூலம் ஒரு நிதியாண்டுக்கு குறைந்தபட்சம் ரூ.250 முதல் அதிகபட்சம் ரூ.ஒன்றரை லட்சம் வரை வரி சலுகை வழங்கப்படுகிறது. கணக்கு துவங்கப்பட்ட நாளில் இருந்து 21 ஆண்டுகளுக்கு பின் கணக்கு முதிர்ச்சி அடைகிறது. 2025 மார்ச் 31 வரை மக்கள் அனைவரும் அருகில் உள்ள அஞ்சலகங்களை அணுகி முகாம்களில் பங்கேற்று கணக்குகள் துவங்கி பயன்பெறலாம், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ