மேலும் செய்திகள்
இரு வழிச் சாலையை 4 வழி சாலையாக மாற்ற ஆய்வு
07-Aug-2024
திருச்சுழி: திருச்சுழி அருகே இரு வழிச்சாலை அமைக்க கோரி, இந்திய கம்யூ., சார்பில் கையெழுத்து இயக்கம் நடந்தது.திருச்சுழி அருகே மேலூரில் இருந்து பரளச்சி வழியாக செங்குளம் பூலாங்கால் கீழ்குடி உட்பட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களுக்கு பத்துக்கு மேற்பட்ட பஸ்கள் சென்று வருகிறது. சென்னை செல்லும் பஸ்களும் இந்த வழியாகத்தான் வருகிறது. இந்தச் சாலை ஒரு வழியாக இருப்பதாலும், ரோடு ஓரங்களில் கரிசல் மண் என்பதால் வாகனங்களில் ஓரங்களில் ஒதுங்கும் போது சேற்றில் சிக்கிக் கொள்வது அடிக்கடி நடக்கிறது. இந்த ஒரு வழிப்பாதையை இருவழி ரோடாக மாற்றக்கோரி இந்திய கம்யூ., சார்பில், ஒன்றிய செயலாளர் செல்வம் தலைமையில் கையெழுத்து இயக்க போராட்டம் நடந்தது. ஊராட்சி தலைவர் அஜ்மல் கான் துவக்கி வைத்தார். விவசாய சங்க மாவட்ட தலைவர் சங்கர பாண்டி, நிர்வாகி காதர் உட்பட 200க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர்.
07-Aug-2024