உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / விரைவில் சிவகாசி சுற்றுவட்டச்சாலை பணி

விரைவில் சிவகாசி சுற்றுவட்டச்சாலை பணி

சிவகாசி: சிவகாசியில் முதல் கட்டமாக 10.4 கிலோ மீட்டருக்கு சுற்றுவட்டச் சாலை அமைக்கும் பணி திட்டமிடப்பட்டுள்ள நிலையில் விரைவில் பணிகள் துவங்க உள்ளதாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.சிவகாசியில் தற்போதைய பெரும் அச்சுறுத்தல் போக்குவரத்து நெருக்கடிதான். இதனை தவிர்க்க 2012 ல் சிவகாசியில் சுற்றுவட்டச் சாலை அமைக்க தீவிர நில எடுப்பு பணிகள் நடந்து வருகிறது. அதன்படி சிவகாசியில் சுற்றிலும் சுற்றுவட்டச் சாலை 34 கிலோ மீட்டர் துாரத்திற்கு அமைகிறது. இப்பணி மூன்று கட்டங்களாக நடைபெற உள்ளது.கீழ திருத்தங்கல், திருத்தங்கல், நாரணாபுரம், அனுப்பன்குளம், வெற்றிலையூரணி, ஆனையூர், ஈஞ்சார் , வடபட்டி, நமஸ்கரித்தான் பட்டி என 10 கிராமங்கள் வழியாக சுற்றுவட்டச் சாலை செல்கிறது. இதற்கான நில எடுப்பு பணிகள் இரண்டு ஆண்டுகளாக துரிதப்படுத்தப்பட்டு முடிவடைய உள்ளது.இந்நிலையில் முதற்கட்டமாக பூவநாதபுரம் விலக்கு முதல் வடமலாபுரம் வரை 10.4 கிலோமீட்டர் நில எடுப்பு பணிகள் முடிந்துள்ளது. கீழ திருத்தங்கல், ஆனையூர் என இரு பகுதிகளில் ரயில் தண்டவாளம் செல்வதால் பாலம் அமைக்க ரயில்வே நிர்வாகத்திற்கு கோரிக்கை அனுப்பப்பட்டுள்ளது. ஸ்ரீவில்லிபுத்துார் -- சிவகாசி, விருதுநகர் -- சிவகாசி, கழுகுமலை -- சிவகாசி - சாத்துார்-சிவகாசி ,- ஆலங்குளம், சிவகாசி- - எரிச்சநத்தம், சிவகாசி -- கன்னிசேரி, விஸ்வநத்தம் -- வெங்கடாசலபுரம் உள்ளிட்ட ரோடுகள் சுற்றாக இணைக்கப்படும்.இந்த சிவகாசி வெளி சுற்றுவட்டச் சாலை பணியில், முதற்கட்ட பணி மட்டும் நடந்தால் எரிச்சநத்தம் வழியாக ஸ்ரீவில்லிபுத்துார் சிவகாசிக்கு எளிதில் சென்று வர முடியும். ஒரு வாரத்தில் சுற்றுவட்ட சாலை அமைக்கும் பணிகள் துவங்க உள்ளதாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறினர்.இதுகுறித்து நெடுஞ்சாலைத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், முதற்கட்டமாக பூவநாதபுரம் விலக்கு முதல் வடமலாபுரம் வரை 10.4 கிலோமீட்டர் நில எடுப்பு பணிகள் முழுமையாக முடிந்துள்ளது. இதனைத் தொடர்ந்து ஒரு வாரத்தில் சுற்றுவட்டச் சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை போடப்பட்டு பணிகள் தொடர்ந்து நடைபெறும். பின்ன மற்ற பகுதிகளிலும் பணிகள் அடுத்தடுத்து நடக்கும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ