எஸ்.பி.கே., மாணவிகள் சாதனை
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அருகே பாலையம்பட்டி பி.பி வி., சாலா மேல்நிலைப்பள்ளியில் நடந்த பளு துாக்கும் போட்டியில் எஸ்.பி.கே., பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் சாதனை படைத்தனர்.பளு துாக்கும் போட்டியில் 45 கிலோ எடை பிரிவில் சோனிகா முதலிடமும், 55 கிலோ எடை பிரிவில் ஹார்னிகா 3 ம், இடம், 59 கிலோ எடை பிரிவில் பிரியதர்ஷினி முதலிடம், பவித்ராலட்சுமி 2 ம் இடம், திலகா 3 ம் இடம், 64 கிலோ எடை பிரிவில் காவியதர்ஷினி முதலிடம், பிரீத்திகா 2 ம் இடம், அன்னலட்சுமி 3 ம் இடம், 71 கிலோ எடை பிரிவில் யோகேஸ்வரி முதலிடம், ஹரிணி 2 ம் இடம், 76 கிலோ எடை பிரிவில் நித்தியா முதலிடம், 81 கிலோ எடை பிரிவில் அட்சயா முதலிடம் பெற்றனர். போட்டியின் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை எஸ்.பி.கே., பெண்கள் மேல்நிலை பள்ளி மாணவிகள் தட்டி சென்றனர். வெற்றி பெற்ற மாணவிகளை அருப்புக்கோட்டை நாடார்கள் உறவின்முறை தலைவர் சுதாகர், எஸ்.பி. கே., ஆண்கள் மேல்நிலைப்பள்ளி செயலர் காசிமுருகன், பள்ளி தலைவர் மதிவாணன், பள்ளி செயலாளர் ராம்குமார், நிர்வாக குழுவினர், தலைமை ஆசிரியை தங்கரதி பாராட்டினர்.