உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ஸ்ரீவி., மலையடிவார விளைநிலங்களில் யானைகள் நடமாட்டம் அதிகரிப்பால் பாதிப்பு

ஸ்ரீவி., மலையடிவார விளைநிலங்களில் யானைகள் நடமாட்டம் அதிகரிப்பால் பாதிப்பு

ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் ராக்காச்சி அம்மன் கோவில், அத்தி துண்டு மலையடிவார தோப்புகளில் யானை கூட்டம் நடமாட்டம் அதிகளவில் காணப்படுகிறது.ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் ஏராளமான யானைகள் உள்ளன. இவைகள் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் நேரங்களிலும், மாங்காய் சீசன் நேரங்களிலும் அடிவாரத்தோப்புகளுக்கு வந்து மரங்களை சேதப்படுத்தி செல்வதும், அதனை வனத்துறையினர் வனப் பகுதிக்குள் விரட்டுவதும் வழக்கம். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 6க்கும் மேற்பட்ட யானைகள் கூட்டமாக ராக்காச்சி அம்மன் கோயில் விரியன் கோயில் பீட், அத்தி துண்டு, செண்பகத் தோப்பு மலையடிவார தோப்புகளுக்குள் புகுந்து சேதத்தை விளைவித்தது.இதனையடுத்து வனச்சரகர் செல்வமணி தலைமையிலான வனத்துறையினர் ட்ரோன்கள் மூலம் யானைகள் நடமாட்டம் இருப்பதை கண்காணித்து வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.அவசியமற்ற நபர்கள் வனப் பகுதிக்குள் நுழைவதை தவிர்க்கவும், விவசாயிகள் தோப்புகளுக்கு கவனமாக சென்று வரவும் வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ