கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை புது பஸ் ஸ்டாண்ட் அருகில் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பாக, அலங்காநல்லுார் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலை திறப்பது, ஒரு டன் கரும்புக்கு ரூ.5 ஆயிரத்து 500 விலை வழங்குவது உட்பட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. தாலுகா செயலாளர் பெருமாள் தலைமை வகித்தார். பொதுச்செயலாளர்ரவீந்திரன் பேசினார். மாநில துணைத்தலைவர் பழனிச்சாமி, மாவட்ட தலைவர் விஜயமுருகன், மாவட்ட செயலாளர் முருகன், விவசாயிகள் கலந்து கொண்டனர்.