ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
விருதுநகர்: விருதுநகரில் பழைய ஓய்வூதிய திட்டம் வேண்டி முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் வாஞ்சிநாதன் தலைமை வகித்தார். செயலாளர் பாலகிருஷ்ணன் வரவேற்றார். மாநில அமைப்பு செயலாளர் முத்தையா, ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி செயலாளர் பாலசுப்பிரமணியன், இடைநிலை ஆசிரியர்கள் சங்க செயலாளர் முருகேசன் பேசினர். இணை செயலாளர் கூடலிங்கம் நன்றி கூறினார்.