தொழில் நுட்ப பயிற்சி
அருப்புக்கோட்டை, ஜூலை 24- அருப்புக்கோட்டை வேளாண் அறிவியல் நிலையத்தில், அறிவியல் நிலையமும் வேளாண்துறை இணைந்து, பருத்தி மற்றும் மக்காச்சோளம் சாகுபடியில் உயர் தொழில்நுட்பங்கள் என்ற பயிற்சி விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. அறிவியல் நிலைய தலைவர் சுப்பிரமணியன் துவக்கி வைத்தார். இதில் உயர் விளைச்சல் ரகங்கள், விதை நேர்த்தி, ஊட்டச்சத்து மேலாண்மை உள்ளிட்ட தொழில்நுட்ப உரைகள் வழங்கப்பட்டன. விளைச்சலை அதிகரிக்க பருத்தி பிளஸ் மற்றும் மக்காச்சோளம் மேக்ஸிம் குறித்து பேராசிரியர் சம்பத்குமார் விளக்கினார். நரிக்குடி அட்மா திட்ட அலுவலர் சுபாஷ் சந்திரபோஸ் கலந்து கொண்டார். விவசாயிகள் பயன் பெற்றனர். ___