உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மாவட்டத்தில் பருத்தி சாகுபடி பரப்பளவை அதிகரிக்க விவசாயிக்கு உதவிகள் தேவை

மாவட்டத்தில் பருத்தி சாகுபடி பரப்பளவை அதிகரிக்க விவசாயிக்கு உதவிகள் தேவை

விருதுநகர் மாவட்டத்தில் நெல் பயிருக்கு அடுத்த படியாக பருத்தி, மக்காச்சோளம் விவசாயம் தான் மிகவும் அதிகளவில் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு தாலுகாவிலும் பல 100 ஏக்கர் பரப்பளவில் பருத்தி சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வந்தனர்.கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பருத்தியின் விளைச்சலும், விலையும் விவசாயிகளுக்கு பேருதவியாக இருந்தது. அப்போது ஒரு குவிண்டால் பருத்தி விலை ரூ. 8 ஆயிரம் முதல் ரு. 10 ஆயிரம் வரை போனது. இதனால் ஏராளமான விவசாயிகள் பருத்தி சாகுபடியில் ஈடுபட்டனர்.ஆனால் தற்போது பருத்தி சாகுபடி செய்வதில் பல்வேறு சிக்கல்களை விவசாயிகள் எதிர்கொள்கின்றனர். தொழிலாளர்கள் சம்பளம் அதிகரிப்பு, இடுபொருட்கள் விலை உயர்வு போன்றவற்றின் காரணமாக உற்பத்தி செலவு அதிகரித்து வருகிறது, ஆனால் பருத்தியின் விலை குறைந்துள்ளதுஇதனால் நடப்பாண்டில் பருத்தி சாகுபடி செய்வதை விவசாயி குறைத்துள்ளனர். கடந்த சில ஆண்டுகளை ஒப்பிடுகையில் தற்போது 30 சதவீத பரப்பளவில் மட்டுமே பருத்தி பயிரிட்டுள்ளனர். இதனால் எதிர்காலத்தில் மாவட்டத்தில் பருத்தி உற்பத்தி தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உள்ளது.மாவட்டத்தில் ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்துார், அருப்புக்கோட்டை போன்ற பகுதிகளில் ஏராளமான நூல் மில்கள் இருக்கும் நிலையில் பருத்தி உற்பத்தி குறைந்தால் மில்கள் தொடர்ந்து இயங்க முடியாத நிலை ஏற்பட்டு, பல ஆயிரம் மில் தொழிலாளர்கள் வேலை இழக்கும் நிலை உருவாகியுள்ளது.இதனை மாவட்ட நிர்வாகம் கருத்தில் கொண்டு மாவட்டத்தில் பருத்தி சாகுபடி பரப்பளவை அதிகரிக்க விவசாயிக்கு தேவையான உதவிகளை செய்வது மிகவும் அவசியம். இதற்கான தொடர் நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என்பது பருத்தி விவசாயிகள் மற்றும் பஞ்சாலை தொழிலாளர்களின் எதிர்பார்ப்பாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை